இன்று என் பிறந்தநாள்

Posted by G J Thamilselvi On Saturday, 3 March 2012 4 comments

இன்று என் பிறந்தநாள்,
இப்புவி உலகில் அபூர்வ மலராக
நான் வந்து உதித்த நாள்
கடந்து வந்த பாதையில்
அன்பும் அறிவும் தந்து
கைப்பற்றி அழைத்து வந்த
எந்தையும் தாயும்
இன்புற்று நெஞ்சார எனை வாழத்த
எத்தனிக்கும் மலரும் நினைவுகளை
மீண்டும் தூண்டிவிடும்
உந்துதலாய் உருபெறும் உகந்த நாள்


எத்தனை புன்னகைகள்
நித்தம் எனை தீண்டும் பரிவுகள்
சோர்ந்த தளங்களிலே ஆறுதலாய்
தூக்கிவிட்ட ஆருயிர் நட்புகள்
முகமறிய ஸ்பரிசங்கள்
அறிமுகமில்லா அன்பர்களின்
சந்தர்ப்ப உதவிகள்
அத்தனைக்கும் நன்றி பகன்று
புது வருடம் காண
புத்துயிர்தந்து என் பயணத்தை
நீட்டித்த இயற்கையாய் தோன்றும்
இறைவனுக்கு தலை வணங்கும்
பணிவு நாள்.

4 comments:

 1. பிறந்த நாளுக்கு அருமை கவிதை

  ReplyDelete
 2. நன்றி தமிழ் ராஜா அவர்களே...

  ReplyDelete
 3. நல்ல கவி..

  பிற்பாடாயினும், வாழ்த்துதலுக்கு வரைமுறையேது என..இனிய பிறந்த நாள் வாழ்த்து கூறிமகிழும் நண்பன் -மு.சுவாமிநாதன்.

  ReplyDelete