நீ மட்டும் வாழ்கிறாய்...

Posted by G J Thamilselvi On Tuesday, 21 February 2012 1 comments
விழிகளின் தழுவலில் காதலின் உதயம்
இத்தனை ஈர்ப்பா உன்னிடத்தில்
மனம் இரும்பாய் ஒட்டிக்கொண்டது,
காந்த யுத்தத்தில்.

தொட்டுச்சென்றாயா என்ன?
கோடி ரோஜாக்கள் பனித்ததாய்
சில்லென்று பரவி சிறகடித்த உணர்வு.

பகலவன் முகத்தை இருளுக்கு உறவாக்க
யுகங்கள் கரைந்து நிமிடங்கள் மட்டும் எச்சமாய்.
முடியா பகல் ஒன்றை நமக்காக படைக்காமல்,
தவிக்கச்செய்ததால் பகையாய் போனான் இறைவன்.

உன் வார்த்தைகளில் பிறந்த ஏக்கம் தான்
அது திருடிச்சென்றது என்னவோ என் தூக்கம்தான்
அவஸ்த்தைகள் மட்டும் ஒன்றாய் இருக்க,
பிரிவு உன்னை தீண்டாமல்,
என்னை மட்டும் இம்சித்தாலும்,
நித்தம் என்னுள் நீங்காமல்……………………………………………………..
நீ மட்டுமே வாழ்கிறாய்.

1 comment:

  1. //நித்தம் என்னுள் நீங்காமல்……………………………………………………..
    நீ மட்டுமே வாழ்கிறாய்.//

    நல்ல வரிகள்.

    ReplyDelete