நீ பேசாத நாட்கள்

Posted by G J Thamilselvi On Saturday, 18 February 2012 1 comments
நீ பேசாத நிமிடங்கள்
கானலாகிறது..............
எத்தனையோ நட்புகளில்
நானும் ஒருத்தியானேன்.
உன்னிடம் தனி இடம் தேடி
தவிக்கிறது மனது.
பொதுவாய் நட்பிற்கென்று
இலக்கணம் வகுப்பவன்
நீ என்றாலும் கூட
இலக்கிய கதாநாயகியாய்
பாவனை செய்கிறது
என் மனம்.
கொஞ்சம் தூரத்தில்...
கொஞ்சும் தூரத்தில்
அல்லாத உறவு
அவ்வளவே நீ என் மீது கொண்ட
நட்பின் வெளிப்பாடு,
இயன்ற வரை அல்ல
வாழ்வின் இறுதி வரை
நீ வேண்டும் என்றே
தவிக்கிறது நெஞ்சம்.
நீ கவிஞன்
உணர்வுளை கவிதையாக்கி
எழுத்து வரிகளுக்குள்,
உனை மறைத்துக்கொள்ள
இயல்பாய் முடிகிறது.
என் தவிப்பும் தடுமாற்றமும்
உனக்கெங்கே புரியப்போகிறது
நீ பேசாத நாட்கள்
என்னுள்......................................
வலிகளை மட்டுமே பிரசவிக்கிறது.

1 comment: