காதல் மட்டும் வாழ்கிறது.

Posted by G J Thamilselvi On Tuesday, 14 February 2012 1 comments
காற்றுக்கொண்டு
தூது அனுப்பி
கார்மேகம் சேதி சொல்லி
நித்தம் உன் நினைவுகளில்
நான் வாடி
நித்திரையில் முத்தமிட்டு
நினைவுலகில் வெட்கப்பட்டு
பார்த்தும் பாராமல்
விழிகளால் தழுவி
கால்கடுக்க நின்று
காத தூரம் பின்தங்கி
உன் நிழலாய் பின் தொடர்ந்து
திரும்பாயோ என ஏக்கம் கொண்டு
திரும்பினால் முகம் மலர்ந்து
திரும்பாத நாட்கள்
மனம் அரும்பாய் கூம்ப
இருவராய் நடந்த பாதையில்
இன்று நான் மட்டும் தனியனாய்.
கடந்த நினைவுகள்
சுகமாய் பரவ
தோற்ற என்னுள்
நித்தம் காதல் மட்டும் வாழ்கிறது.

1 comment:

  1. தங்களின் வலைப்பக்கத்தை இன்று தான் சுவைத் தேன்.
    அனைத்து பதிவுகளும் தெவிட்டாத அருந் தேன்.
    வாழ்த்துகள்.
    தமிழ்செல்விஞானப்பிரகாசம்

    ReplyDelete