என் சுவாச காற்றே

Posted by G J Thamilselvi On Saturday, 25 February 2012 1 comments

கார் முகில் கேசம்
என் கண்களை கொள்ளைக்கொள்கிறது..!

நெற்றியில் முத்தமிட ஆசை
எழுகிறது………!

வில்லாய் வளைந்த புருவம்
என்னுள் வியப்பில் விழுகிறது..!  
          
உன் காந்த விழிகளில்
நெஞ்சம் தொலைகிறது…….!

இமைகளின் படபடப்பில்
இதயம் பறக்கிறது…………!

உன் சுவாச காற்றில்
என் சுவாசம் கரைகிறது…….!  

உன் மீசை குறும்பில்
பெண்மை தொலைகிறது……..!

உன் இதழ்களின் சுழிப்பில்
மின்சாரம் பிறக்கிறது………….!

உன் தொண்டை அசைவில்
கண்கள் அசைய மறுக்கிறது…..!

உன் நெஞ்சமதில் மஞ்சமிட
என் உயிர் உயிர்க்கிறது……….!

மேலும் வாசிக்க

நீ மட்டும் வாழ்கிறாய்...

Posted by G J Thamilselvi On Tuesday, 21 February 2012 1 comments
விழிகளின் தழுவலில் காதலின் உதயம்
இத்தனை ஈர்ப்பா உன்னிடத்தில்
மனம் இரும்பாய் ஒட்டிக்கொண்டது,
காந்த யுத்தத்தில்.

தொட்டுச்சென்றாயா என்ன?
கோடி ரோஜாக்கள் பனித்ததாய்
சில்லென்று பரவி சிறகடித்த உணர்வு.

பகலவன் முகத்தை இருளுக்கு உறவாக்க
யுகங்கள் கரைந்து நிமிடங்கள் மட்டும் எச்சமாய்.
முடியா பகல் ஒன்றை நமக்காக படைக்காமல்,
தவிக்கச்செய்ததால் பகையாய் போனான் இறைவன்.

உன் வார்த்தைகளில் பிறந்த ஏக்கம் தான்
அது திருடிச்சென்றது என்னவோ என் தூக்கம்தான்
அவஸ்த்தைகள் மட்டும் ஒன்றாய் இருக்க,
பிரிவு உன்னை தீண்டாமல்,
என்னை மட்டும் இம்சித்தாலும்,
நித்தம் என்னுள் நீங்காமல்……………………………………………………..
நீ மட்டுமே வாழ்கிறாய்.
மேலும் வாசிக்க

முத்தத்தேடல்

Posted by G J Thamilselvi On Sunday, 19 February 2012 2 comments
தென்றலின் தீண்டல்
என சிலிர்த்து நிமிர்ந்தேன்.
என் அருகில் நீ இருந்தால்,
நான் என்ன செய்வேன்?
உன் மூச்சு காற்றல்லவா,
தென்றலாய் எனை தீண்டியது.
உனை நோக்க இயலாமல்,
என் விழி உனை தாண்டியது.
நகரவும் முடியாமல் – உன்
மார்பில் சாயவும் இயலாமல்
தவிக்கிறது நெஞ்சம்.
அடுத்தென்ன செய்வாய்?
என்றதொரு எதிர்பார்ப்பு
நம் இதழ்கள் இணைய செய்வாய்
நெஞ்சுக்கூட்டில் பரபரப்பு.
படபடக்கும் பட்டாம்பூச்சிகளின்
சிறகடிப்பு…………………
இதழ்கள் உறவாடியிருந்தால்
முடிந்திருக்கும்
உடல்களின் ஏக்கம்
விலகி நீ நடந்ததினால்
உண்டானது உள்ளத்தின் தாக்கம்.
காதல் முத்திரையில்
காமத்தை கடந்து சென்ற,
உன் பாதச்சுவடுகளை இன்று வரை
பார்த்து நிற்கிறேன் நான்
முத்தமிட நீ வருவாய் என.
மேலும் வாசிக்க

பகலவனைப் பார்த்து

Posted by G J Thamilselvi On 1 comments
ஒரு பறவை மெல்ல சிறகடிக்கும் தூரம்தான்
நம்மிடையேயான இடைவெளியோ?
வினாவிற்குள் விடைதேடினேன்
எத்தனை தூரமாய் இருந்தால்தான் என்ன?
மஞ்சளாய் நீ ஜொலித்த ஒரு மாலையில்
உன் மீது மையல் கொண்டேன் நான்.
வான நீலத்தில் உன் வண்ணம்
நிமிடத்தில் நிறம் மாறும் சேதிதான் என்னவோ?
மஞ்சள் சிவந்த தங்கபழமாய் அல்லவா
உருமாறினாய்.
உன் இதமான வெம்மையில்
என் உடல் அடைந்த கிளர்ச்சியினை
உன்னிடத்தில் விவரிக்க சற்று நேரில்
வந்தால் என்ன செய்வாய்?
ஓ காதலிப்பது நான் தானே
என் காதலின் அவஸ்தை உனக்குள்
உயிர்க்குமா என்ன?
உணர்ச்சி கொந்தளிப்பில் என் காதல் பிதற்றல்கள்
உனக்கு பைத்தியங்களின் மொத்த உருமாற்றமாகலாம்.
உன் பிம்பத்தில் இடைபுகுந்து
பறவை பறந்த இடைவெளிக்கூட
என் இதயத்தை கிழித்து சென்றதாய்
விக்கித்து நின்றேன்.
உனை தீண்டினால் நான் தீய்ந்து போவேன்
எனத்தெரிந்தும் கூட
உன் தீக்கரங்களில் சரண்புக சித்தமானேன்
எட்டாதவனாய் நீ இருந்தாலும்,
எட்டி நின்றேனும் உனை காதலிப்பேன்.
மேலும் வாசிக்க

நீ பேசாத நாட்கள்

Posted by G J Thamilselvi On Saturday, 18 February 2012 1 comments
நீ பேசாத நிமிடங்கள்
கானலாகிறது..............
எத்தனையோ நட்புகளில்
நானும் ஒருத்தியானேன்.
உன்னிடம் தனி இடம் தேடி
தவிக்கிறது மனது.
பொதுவாய் நட்பிற்கென்று
இலக்கணம் வகுப்பவன்
நீ என்றாலும் கூட
இலக்கிய கதாநாயகியாய்
பாவனை செய்கிறது
என் மனம்.
கொஞ்சம் தூரத்தில்...
கொஞ்சும் தூரத்தில்
அல்லாத உறவு
அவ்வளவே நீ என் மீது கொண்ட
நட்பின் வெளிப்பாடு,
இயன்ற வரை அல்ல
வாழ்வின் இறுதி வரை
நீ வேண்டும் என்றே
தவிக்கிறது நெஞ்சம்.
நீ கவிஞன்
உணர்வுளை கவிதையாக்கி
எழுத்து வரிகளுக்குள்,
உனை மறைத்துக்கொள்ள
இயல்பாய் முடிகிறது.
என் தவிப்பும் தடுமாற்றமும்
உனக்கெங்கே புரியப்போகிறது
நீ பேசாத நாட்கள்
என்னுள்......................................
வலிகளை மட்டுமே பிரசவிக்கிறது.
மேலும் வாசிக்க

காதல் மட்டும் வாழ்கிறது.

Posted by G J Thamilselvi On Tuesday, 14 February 2012 1 comments
காற்றுக்கொண்டு
தூது அனுப்பி
கார்மேகம் சேதி சொல்லி
நித்தம் உன் நினைவுகளில்
நான் வாடி
மேலும் வாசிக்க